அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பாம்பு வேட்டை : இரு வாரங்களில் 10 மலைப் பாம்புகள் பிடிக்கப்பட்டன!!

1370

 
அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்தில் இரு வார கால இடை­வெ­ளியில் பாரிய 10 மலைப்­பாம்­புகள் பிடிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 15 அடி­களை விட நீள­மான இரு பாம்­பு­களும் அடங்கும்.

இவற்றில் மிகப் பெரிய பாம்பு 15 அடி மற்றும் 10 அங்­குல நீள­மா­னது. இரண்­டா­வது மிகப் பெரிய பாம்பு 15 அடி மற்றும் 2 அங்­குல நீள­மா­னது. பாம்புப் பிடிப்­ப­தற்­கான அனு­மதிப் பத்­திரம் கொண்­டுள்­ள­வர்­களால் இப்­ பாம்­புகள் பிடிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

நிக்­கலஸ் பனோஸ், லிய­னார்டோ சான்சஸ் ஆகியோர் அண்­மையில் 15 அடி நீளமான மலைப்­பாம்பை பிடித்­தனர். பர்­மிய மலைப்­பாம்­புகள் புளோ­ரிடா மாநி­லத்தில் பொது இடங்­களை அழிப்­ப­துடன், சுற்­றாடல் உணவுச் சங்­கி­லிக்கும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதனால், தென் புளோ­ரிடா நீர் முகா­மைத்­துவத் துறை அதி­கா­ரி­களால் 175,000 டொலர் செலவில் பாம்­பு­களைப் பிடிப்­ப­தற்­கான திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இத்­ திட்­டத்தில் 25 பேர் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர். பாம்­பு­களைப் பிடிப்­ப­தற்கு இவர்­க­ளுக்கு 60 நாட்கள் அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவர்­க­ளுக்கு நாளாந்தம் 8 மணித்­தி­யா­லங்கள் வரை மணித்­தி­யால அடிப்­ப­டையில் ஊதியம் வழங்­கப்­ப­டு­கி­றது. 4 அடி­க­ளுக்கு மேற்­பட்ட பாம்­பு­களைப் பிடித்தால் மேல­தி­க­மாக 50 டொலர்கள் (சுமார் 7,650 ரூபா) வழங்­கப்­படும். அத்­துடன், மிகப் பெரிய பாம்­பு­க­ளுக்கு 4 அடிக்கும் அதி­க­மான ஒவ்­வொரு அடி நீளத்­துக்கும் 25 டொலர்கள் (3,825 ரூபா) வழங்கப்படும்.

இதன்படி, 15 அடி நீளமான பாம்புக்கு 275 டொலர் (சுமார் 42, 075 ரூபா) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.