குடிகார கணவனை வெட்டிக் கொன்ற இளம் மனைவி!!

475

bloody-knife

தமிழகத்தின் சிவகங்கை அருகே குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த கணவனை மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே உள்ள கல்வெட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சோணைமுத்து. இவரது மகன் பாரிமன்னன் (28) முச்சக்கர வண்டி சாரதியாக உள்ளார். இவர் மீது வழிப்பறி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் உள்ளன.

அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவனுக்கு முத்துமாரி (23), பிரவீனா (21) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் முத்துமாரிக்கு 2 குழந்தைகளும் பிரவீனாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.



பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள பாரிமன்னன் அடிக்கடி சிறைக்கு சென்று விடுவதால் அவனது 2 மனைவிகளும் வெறுப்படைந்தனர். இதனால் முத்துமாரி அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கும் பிரவீனா, அரியலூர் தென்மாபட்டு பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கும் சென்று விட்டனர்.

நேற்று இரவு தென்மாபட்டுக்கு சென்ற பாரிமன்னன் மனைவி பிரவீனாவுடன் தகராறு செய்துள்ளார். குடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீனா வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பாரிமன்னன் கண்களில் வீசினார். இதில் நிலைகுலைந்த அவனை பிரவீனா கீழே தள்ளினார்.

பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் என்றும் பாராமல் கழுத்தை அறுத்தார். இதில் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாரிமன்னன் பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து பிரவீனா கையில் அரிவாளுடன் திருப்பத்தூர் பொலிஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவியே கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.