இந்தியாவிற்கு வர மாட்டேன் : சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர்!!

272

Asad-Rauf

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரை தேடப்படும் குற்றவாளியாக மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவரது சார்பில் வக்கீல் சயத் அலி ஜாபர் நேற்று லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில் ரவுப் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றது. அவர் மீதான புகார்களை வலுவாக மறுக்கிறேன்.

ரவுப் இந்திய நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால் மும்பை பொலிஸ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இதனால் வழக்கின் எந்த விசாரணைக்கும் இந்தியாவுக்கு செல்ல மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசாத் ராப் ஆசியாவில் பரிசுப் பொருட்களை பெறுவதும் கொடுப்பதும் பாரம்பரியமானது தான். இவை எடுத்து வருவது என்பது எவ்வித கிரிமினில் குற்றமும் இல்லை. பரிசுப் பொருட்களை டெல்லி விமான நிலையத்தில் விட்டு விட்டு வந்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை.

நான் தான் அவற்றை அனுப்பி வைக்குமாறு வின்டூ தாராசிங்கிடம் தெரிவித்தேன். எல்லோரும் சொல்வது போல விலையுயர்ந்த நகைகள் எல்லாம் அதில் கிடையாது. புனிதப் பொருட்கள் தான் இருந்தன.

ஐ.சி.சியில் நடுவராக உள்ளேன் அவர்கள் தனியாக ஊழல் தடுப்பு குழு வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.சி.சியிடம் எடுத்துக் கூற தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.