சிம்பாவேயில் நடந்த கொடூரம்!!

516

zimbabwe_elephant_killed_004

சிம்பாவேயில் நடந்த மனிதர்களின் இரக்கமற்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பாவேயின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான வாங்கே தேசிய பூங்காவில் 80 ஆயிரம் யானைகள் இருக்கின்றன.
இந்த சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக யானைகள் இறந்து கிடந்ததும் அவற்றின் தந்ததங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதும் அண்மையில் தெரியவந்தது.

யானைகள் தாகம் தீர்க்க வரும் குட்டைகளில் சயனைட் விஷத்தைக் கலந்து கொலை செய்திருக்கின்றனர். இது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.



இதுகுறித்து கருத்து தெரிவித்த சிம்பாவே சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேட்டை கும்பலுக்கு 9 ஆண்டு சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டும் அவர்களை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.