சவுதி அரேபிய மக்களும் நிறுவனங்களும் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை!!

740

சவுதி அரேபிய மக்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என அந்நாட்டின் நிதி அமைச்சர் மொஹமட் அல் ஜடான் அறிவித்துள்ளார்.

மேலும், அங்குள்ள நிறுவனங்களும் தமது இலாபத்தைக் கணக்கிட்டு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் இடையில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தால் சவுதியின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இதனைக் கட்டுப்படுத்த சவுதி அரசாங்கம் புதிய வரிகள், தனியார்மயமாக்கல், மாற்றப்பட்ட முதலீட்டு உத்திகளைக் கையாண்டது.

தற்போது வருமான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், 2018ம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரி எனப்படும் வெட் வரியை உயர்த்தும் எண்ணம் இருப்பதாகவும் ஆனால் அதுவும் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலின் கீழ் வரும் 6 அரபு முடியாட்சி நாடுகளில் 2018 ஆம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரியை 5 சதவீதமாக அறவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணெய்ப் பொருளாதாரம் அல்லாத பிறவற்றின் மூலம் வருவாயை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.