நூற்றாண்டு சினிமா விழாவில் ரஜினி, கமலுக்கு அவமானம் : கருணாநிதி கவலை!!

494

indian_cinema

சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை 21ம் திகதி முதல் ஜெயலலிதா சென்னையில் தொடங்கிவைத்தார். நான்கு மாநில சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த விழாவானது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இவ்விழா குறித்து கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர் போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை.



மேலும் அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பின் அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்தியது அநாகரிகச் செயல்.

ரஜினியும், கமலும் இரண்டாவது வரிசையில் எங்கோ நின்று கொண்டிருக்கும் காட்சியையும் கண்டேன். அவர்களுடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து எந்த அளவிற்கு வேதனைப்பட்டிருப்பார்கள்.

முதல்வரோ மற்ற அமைச்சர்களோ இதையெல்லாம் கவனிக்க நேரம் இடந்தராது. நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் தான் ஆழ்ந்து ஆலோசித்து கவனித்திருக்க வேண்டும்.

ஏனென்றால் கலைஞர்கள் எப்போதும் மிகவும் சுயமரியாதை உடையவர்களாக அனிச்ச மலரை ஒத்தவர்களாக இருப்பர்.அவர்களின் மனம் வேதனை அடையும்படி தன்மானம் காயம்படும்படி நடந்து கொள்ளக் கூடாது.

நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டனரே நம் தன்மானம் காப்பாற்றப்பட்டதே என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
அழைக்காமல் பலரையும் அழைத்துப் பலரையும் பெருமைப்படுத்தி இருப்பதே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா என்று கருணாநிதி கூறியுள்ளார்.