சிம்பு- ஹன்சிகா திருமணம் எப்போது?

437

Simbu-Hansika

சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது என பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் காதலிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டது.

காதலை பல நாட்களாக மறைத்து வைத்து இருந்தனர். ஆனாலும் இருவரை பற்றியும் கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில்தான் காதலை பகிரங்க படுத்தி அறிவிப்பு வெளியிட்டார்கள்.

சிம்பு ஏற்கனவே காதல் சர்ச்சைகளில் இருந்து மீண்டவர். அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்தார்கள். தற்போது ஹன்சிகாவுடனான காதலை சிம்பு வெளிப்படுத்தி இருப்பதால் திருமணத்தை உடனே முடித்து விட ஆர்வம் காட்டுகின்றனர்.



சிம்புவும் திருமணத்துக்கு தயார் நிலையில் இருக்கிறார். ஆனால் ஹன்சிகா உடனடி திருமணத்துக்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். கைவசம் 7 படங்கள் உள்ளன.

இப்படங்களை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறாராம். திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போடும் நிலைமை ஏற்படும். எனவே கைவசம் உள்ள படங்களை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். எனவே ஓரிரு வருடங்கள் கழித்தே திருமணம் நடக்கும் என தெரிகிறது.