வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்ணகியம்மன் இறங்குதுறை பகுதியில் வைத்து நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனலைதீவிற்கு சென்று திரும்பும் வழியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாகனத்தின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.