ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பை தவிர்த்துக் கொண்டார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற மகிந்த ராஜபக்ச இலங்கை திரும்புவதற்கு முன்னதாக மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசலாம் என்று அவரது வருகைக்காக நியூயோர்க்கில் காத்திருந்தார்.
ஆனால் வொஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துவிட்டு நியூயோர்க் புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட நேரத்துக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் வேறுவழியில்லாமல் அவரை சந்திக்காமலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புறப்பட்டுச் சென்று விட்டார்.
பிரதமர் மன்மோகன் சிங் அதிகாரபூர்வமற்ற முறையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க விரும்பவில்லை என்றும் அதன் காரணமாகவே அவர் வொஷிங்டனிலிருந்து சில மணிநேரம் தாமதமாக நியூயோர்க் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.