வவுனியா செட்டிகுளத்தில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!!

240


5000

செட்டிகுளம், மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணேசபுரம் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இவர்கள் கைதாகியுள்ளார்.இதன்போது சந்தேகநபர்கள் வசமருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 9ம், 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 9ம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பின்னர் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் சில போலி நாணயத் தாள்கள் சிக்கியுள்ளன.இதன்படி பிரதான சந்தேகநபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 ரூபா போலி நாணயத் தாள்கள் மூன்றும் 1000 ரூபா போலி நாணயத் தாள்கள் 60ம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்