குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் : 68 குழந்தைகள் பலி : கதறிய குழந்தைகள்!!

252

 
சிரியாவில் பேருந்துகளை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 68 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் இடையே உள நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இது 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சிரியாவின் அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அப்பகுதியை அவர்களிடம் இருந்து மீட்பதற்காக, அதிபர் படையினர் கடந்த மாதம் அவர்களுடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக அங்கிருந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மக்களும் அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், அலெப்போ நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பேருந்துகள் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்துகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 126-பேர் பலியாகியுள்ளனர். அதில் 68 பேர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இட்லிப் மாகாணத்தின் அல்-பவுயா மற்றும் கெப்ரயா கிராமங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த தாக்குதலின் விபத்துக்குள்ளான குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, அங்கு சிகிச்சை அளித்த நேரத்தில் வலி தாங்கமுடியாமல் சத்தம் போட்ட சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.