பெண் ஊழியர்களின் தலை முடியை கத்தரித்த நைஜீரிய வீதிப் பாதுகாப்புப் படையணியின் உயரதிகாரி!!

521

 
நைஜீ­ரிய வீதிப் பாது­காப்புப் படை­ய­ணியின் உயர் அதி­காரி ஒருவர், அப்­ப­டையின் பெண் ஊழி­யர்­களின் தலை­ம­யிரை கத்­த­ரித்­தமை தொடர்­பாக ஒழுக்­காற்று விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

நைஜீ­ரி­யாவின் வீதிப் பாது­காப்பு மற்றும் முகா­மைத்­து­வத்­துக்கு வீதிப் பாது­காப்புப் படை­யணி பொறுப்­பாக உள்­ளது.

அப்­ப­டை­ய­ணியின், சிரேஷ்ட தள­ப­தி­களில் ஒரு­வ­ரான அன்ட்ரூ குமா­பயி, அப்­ப­டை­ய­ணியின் பெண் ஊழி­யர்கள் பலரின் தலை­ம­யிரை கத்­த­ரித்தார்.

வீதிப் பாது­காப்புப் படை­ய­ணியின் வீதி­களை மீறும் வகையில் சிகை­ய­லங்­காரம் செய்­தி­ருந்த, பெண் ஊழி­யர்­களைத் தண்­டிக்கும் வித­மாக அன்ட்ரூ குமா­பயி இந்­ந­ட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தாக தெரி­விக்கப்­ப­டு­கி­றது.
நைஜீ­ரி­யாவின் தென் பிராந்­தி­யத்­தி­லுள்ள ரிவர்ஸ் மாநி­லத்தின் வீதிப் பாது­காப்புப் படை­ய­ணியின் தள­ப­தி­யாக அன்ட்ரூ குமா­பயி பதவி வகிக்­கிறார். அம்­மா­நி­லத்தின் போர்ட் ஹார்கோர்ட் நகரில் கடந்த திங்­கட்­கி­ழமை அவர் பெண் ஊழி­யர்­களின் தலை­ம­யிரை கத்­த­ரித்தார்.

இந்­ந­ட­வ­டிக்கை தொடர்­பாக அன்ட்ரூ குமா­ப­யிக்கு எதி­ராக நைஜீ­ரியா அதி­கா­ரிகள் ஒழுங்கு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இச்­சம்­ப­வத்தில் தொடர்­பு­டைய வேறு சில அதி­கா­ரிகள் குறித்து பிராந்­தி­யத்­தி­லி­ருந்து திருப்பி அழைக்­கப்­பட்­டுள்­ளனர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணை­களின் பின்னர் பொருத்­த­மான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என நைஜீ­ரிய வீதிப் பாது­காப்புப் படை­ய­ணியின் பேச்­சாளர் பிசி கஸீம் தெரி­வித்­துள்ளார்.

அன்ட்ரூ குமா­ப­யியின் நட­வ­டிக்­கையை நைஜீ­ரிய ஜனா­தி­பதி முஹம்­மது புஹா­ரியின் உத­வி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான லொராட்டா ஒனாச்சி கண்­டித்­தள்ளார். இது பெண்­களை அவ­ம­திக்கும் நட­வ­டிக்கை என அவர் விமர்­சித்­துள்ளார்.

நைஜீ­ரிய வீதிப் பாது­காப்புப் படையணியின் பெண் ஊழியர்கள் தமது தலைமயிரை உத்தியோகபூர்வ தொப்பிக்குள் அடக்கிக்கொள்ள வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், அவ்வூழியர்கள் நீளமாக தலைமயிர் வளர்ப்பது தடைசெய்யப் படவில்லை.