நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறப்படும் வழக்கில் தனுஷ் தரப்பில் சம்ர்ப்பிக்கபட்ட ஆவணங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு பல மாதங்களாக நடந்து வரும் நிலையில் கடந்த 10ஆம் திகதி நடந்த விசாரணையில், கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்துள்ள பிறப்பு சான்றிதழ் போலியானது. தனுஷின் தந்தை கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் பெறப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழ் வேறொருவருக்காக வழங்கப்பட்டது
மேலும், நாயக்கர் ஜாதியான கஸ்தூரி ராஜா தனுஷ் பள்ளி சான்றிதழ்களில் எஸ்.சி என குறிப்பிட்டுள்ளார். இதை விசாரிக்க வேண்டும் என கூறினார்.
இது குறித்து தற்போது பேட்டியளித்த அவர், தனுஷ் கதிரேசன் தம்பதியின் மகன் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம்,
ஜாதியை மாற்றி எழுதியுள்ளார்களா அல்லது வேறு ஒருவரின் சர்டிபிகேட்டை காட்டுகிறார்களா என விசாரிக்க சொல்வோம்
இந்த வழக்கின் வக்காலத்தில் போடப்பட்டிருக்கும் கையெழுத்து தனுஷுடையதுதானா என்ற சந்தேகமும் உள்ளது.
இது அனைத்துக்கும் பின்னர் உண்மை வெளிவரும் என அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.






