மியன்மாரில் தண்ணீர் திருவிழாவில் 285 பேர் பலி, 1073 பேர் காயம்!!

532

 
மியன்­மாரில் நடை­பெற்ற தண்ணீர் திரு­வி­ழாவில், 285 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 1,073 பேர் காய­ம­டைந்­துள்ளனர்.

மியன்­மாரில் புத்­தாண்டு திரு­நாளை முன்­னிட்டு, பல்­வேறு கொண்­டாட்­டங்­க­ளுக்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இதற்­காக 5 நாட்கள் விடு­முறை விடப்­பட்­டது. அதில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளை­யாடும் தண்ணீர் திரு­வி­ழாவும் அடங்கும்.

அவ்­வாறு செய்­வ­தன்­மூலம் தங்கள் மீதான பாவங்கள் நீங்கும் எனவும், குறைகள் போக்­கப்­பட்டு புதிய வாழ்வு மலரும் எனவும் நம்­பு­கின்­றனர். இந்த ஆண்டு புத்­தாண்டு கொண்­டாட்­டங்­களில் பொது­மக்கள் மிகுந்த மகிழ்ச்­சி­யுடன் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில், கடந்த வியா­ழக்­கி­ழமை தொடக்கம் ஞாயிற்­றுக்­கி­ழமை வரை 4 நாட்­க­ளாக தண்ணீர் திரு­விழா கொண்­டாட்­டத்­தின்­போது ஏற்­பட்ட விபத்­துக்­களால், 285 பேர் மியன்மாரின் பல பாகங்களிலும் உயி­ரி­ழந்­தனர்.

யாங்கூன் பகு­தியில் 44 பேரும், மண்­டாலே பகு­தியில் 36 பேரும் நய் பி டோ பகுதியில் 10 பேரும் சகைங் பகுதியில் 26 பேரும் தனின்­தர்யி பகு­தியில் 11 பேரும் பகோ பகுதியில் 37 பேரும் மக்வே பகுதியில் 11 பேரும் மொன் மாநிலத்தில் 20 பேரும் ரகின் பகு­தி யில் 17 பேரும் ஷன் மாநிலத்தில் 29 பேரும் அயெ­யா­வட்டி பிராந்தியத்தில் 28 பேரும் இறந்துள்ளனர்.

அதே­நேரம் கொலை, கார் விபத்து, போதைப் பொருள் பயன்­பாடு, ஆயு­தங்கள் பயன்­பாடு, கல­வரம் என 1,200 வழக்­குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்தில், 272 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,086 பேர் படுகாயமடைந்தனர்.