உலகை இருந்த இடத்திலிருந்தே சுற்றிப் பார்க்க கூகுளின் புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்த கருவியினை நேற்று புதிய அறிமுகமாக வெளியிட்டுள்ளது.
உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப்பார்க்க கூகுளின் புதிய அறிமுகம் உங்களுக்கு உதவும். ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்தக் கருவி ஒரு நிமிடத்தில் உங்களை அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கூட்டிச் செல்லும்.
ஆற்றுப் படுகையிலிருந்து, கல் பாலங்கள் வரை சுதந்திரதேவி சிலையிலிருந்து உள்ளூர் கோயில்கள் வரை அத்தனையையும் கூகுள் டூல் கருவியில் பார்க்க முடியும்.
குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு விளையாட்டாகவே இதில் விளையாடலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது