2013ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஒவ்வொரு ஆண்டும் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஹோடகம பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.





