கிளிநொச்சியில் சிறுமிகள் மூவர் பாலியல் துஸ்பிரயோகம் : கண்காணிப்பு கருவிகள் நீதிமன்றில்!!

251

கிளிநொச்சி – பளை பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவரை தொடர்ந்தும் சிறையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிப்பதற்கு நீதிமன்று அனுமதி வழங்கியதுடன், எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பளைப்பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து இந்த மாதம் 8ஆம் திகதி சிறுமிகள் மூவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பதிவாளர், பொலிஸார், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கொண்ட குழுவினர் மன்றின் பணிப்பின் பெயரில் பளைப்பகுதியில் உள்ள குறித்த வீட்டினை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் சில சான்றுப்பொருட்களையும் மீட்டுள்ளனர்.

தொடர்ந்து குறித்த வழக்கு கடந்த 21ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பவத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிப்பதற்கு பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பத்தை 24ஆம் திகதி நீதிமன்றம் அனுமதித்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த வழக்கை கையில் எடுத்தனர்.

இதையடுத்து கடந்த 24ஆம் திகதியில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று குறித்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

இதன்போதே சந்தேகநபரை தொடர்ந்தும் சிறையில் வைத்து விசாரிப்பதற்கும், ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பளைப்பகுதில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கருவிகள் இன்று பொலிஸாரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது