நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறையினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்த்திக் தாயார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் தற்கொலை செய்து கொண்ட ஹொட்டலில் கண்டெடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் நந்தினியின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த நெருக்கடியால், தற்கொலை செய்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் விருகம்பாக்கம் காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் எனவே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு விருகம்பாக்கம் காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கினை ஜூன் 2ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.






