வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு நிரந்தரத்தீர்வு!!

211

 
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் நெடுங்கேணி சின்ன அடம்பன் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் குடியமர மறுத்துவந்தனர்.

நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தினால் புதிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு திறப்புக்கள் வழங்கிவைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

எனினும் சின்ன அடம்பன் பகுதியில் குடியமருவதற்கு நலன்புரி நிலையத்திலிருந்த ஒரு பகுதியினர் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை 5.00 மணியளவில் நலன்புரி நிலையத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன் லைக்கா நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளில் வசிக்க முடியாததற்கான காரணத்தினையும் கேட்டறிந்து கொண்டதுடன் அரசாங்க அதிபர், திட்டப்பணிப்பாளர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டு புளியங்குளம் பரசன்குளம் பகுதியில் லைக்கா நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளில் வசிப்பதற்கு விருப்பம் தெரிவித்த நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் குடியமருவதற்கு ஏற்ப்பாடு செய்து கொடுக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் புளியங்குளம் பகுதியில் சென்று குடியமருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களுக்கு நிரந்தரத்தீர்வினைப் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.