என்னையும் கொன்றுவிடுங்கள் : தாய், சகோதரியை கொன்ற இளைஞர் கதறல்!!

574

சென்னையில் தனது அம்மா மற்றும் சகோதரியை கொலை செய்த இளைஞருக்கு பொலிசார் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்.

சென்னையில் சைதாபேட்டையை சேர்ந்தவர் ஹேமலதா, இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகளும், பால முருகன் என்ற மகனும் உள்ளனர். ஹேமலதாவின் கணவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

அப்பாவின் இழப்பை தாங்க முடியாமல் தவித்து வந்துள்ளார் பாலமுருகன். இந்நிலையில், அப்பாவின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாலமுருகனின் மனநிலை மேலும் பாதித்துள்ளது.

இதையடுத்து தனது அம்மா ஹேமலதாவிடம், நாமும் அப்பா சென்ற இடத்துக்கே சென்று விடுவோம் என கூறியுள்ளார்.
அதன் பின்னர் பாலமுருகனை ஹேமலதா சமாதானபடுத்தியுள்ளார். ஆனாலும் சமாதானம் ஆகாத பாலமுருகன் தன் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள கேளம்பாக்கம் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கே அவரை பொலிசார் பிடித்துள்ளனர். அப்போது பொலிசாரிடம் பாலமுருகன், தப்பு பண்ணிட்டேன் சார். நானும் சாக வேண்டும். அப்பா, அம்மா, தங்கை என எல்லோரும் இறந்த பின்னர் நான் மட்டும் ஏன் வாழ வேண்டும் என கதறியுள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், பாலமுருகனை சமாதானப்படுத்தி கவுன்சலிங் கொடுத்தோம்.

இன்னும் அவர் மன அழுத்தத்தில் உள்ளதால் வேறு எந்தவித தவறான முடிவையும் எடுப்பதற்கு முன்பு மேலும் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.