இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி ஜெயவர்தனே கலகலப்பூட்டியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதின.
இந்த போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற்றது.
போட்டி முடிந்த பின்னர் மும்பை வீரர் லசித் மலிங்கா போன்று அச்சு அசல் உருவம் கொண்ட ஒரு நபர் மலிங்காவை சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே, வெகு நாட்களுக்கு முன்னர் தொலைந்து போன தனது சகோதரரை மலிங்கா கண்டுபிடித்து விட்டார் என கிண்டலாக கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.






