சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதான மே தினம் மாங்குளத்தில்!!

253

 
வடமாகாணசபையின் அதிகார மையத்தை மாங்குளத்தில் நிறுவு என்ற கோசத்துடன் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

மாங்குளம் வடமாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளமையினாலும் ஏனைய மாவட்டங்களில் இருந்து இலகுவாக வந்து செல்லக்கூடிய பகுதியாக காணப்படுவதாலும் வடமாகாணத்தின் வளங்கள் எல்லாப் பிரதேசங்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் மாங்குளத்தை பிரதான நகராமாக அபிவிருத்தி செய்தல் வேண்டும்.

இனப் பிரச்சனைக்கு அடிப்படை காரணங்களாக அமைந்துள்ள அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களுக்கு தீர்வை காணாது காலம் தாழ்த்துவது தொடர்பாக எமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கும் அங்கவீனமானவர்களின் குடும்பங்களுக்கும் வாழ்க்கையை முன்னேற்ற தேவையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும், யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி உடன் வழங்கப்பட வேண்டும். யுத்தத்திற்கு முன்பும் பின்பும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை உடனடியாக அந்த மக்களிடம் கையளிப்பதோடு வாழ்வாதார உதவிகள் செய்துக் கொடுக்கப்பட வேண்டும்

என்ற பிரதான மே தின பிரகடனத்துடன் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் பரட்சிகர மேதினமானது மங்குளத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக 2.30 மணிக்கு பேரணி தொடங்கப்பட்டு மாங்குளம் மகாவித்தியாலயத்தின் மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு பொதுக் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது.

பேரணியில் சென்றவர்கள் ஆளும் தேசிய கூட்டரசே பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு!
அரசியல் கைதிகளை விடுதலை செய்!
வட மாகாணத்தின் தலைநகரமான மாங்குளத்தில் மாகாணசபையின் அதிகார மையத்தை நிறுவு!
பெண்களின் வாழ்க்கையை சிதைக்கும் நுண்கடன் கம்பனிகளை உடனே இழுத்து மூடு!
மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கு!
போன்ற கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்
தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கொட்டும் மழையிலும் இணைநது இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

நிகழ்வில் சமூக விழப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன், செயலாளர் ரி.தேவசாந்தன், வவுனியா மாவட்ட அமைப்பாளர்; அயூப்கான், வவுனியா மாவட்ட ஊடக பேச்சாளர் எஸ்.சதீஸ்குமார் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.