3 கால்களுடன் பிறந்த சிறுமி : வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை!!

251

 
வங்கதேசத்தில் 3 கால்களுடன் பிறந்த சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்ற இடுப்புடன் இணைந்த மூன்றாவது காலுடன் பிறந்துள்ளார். தற்போது 3 வயதை எட்டியுள்ள இச்சிறுமிக்கு அவுஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் கிரிம்ஸ் கிம்பெர் கூறியதாவது, சோய்டியின் மூன்றாவது காலின் ஒரு பகுதியை வங்கதேச மருத்துவர்கள் அகற்றினாலும், இரண்டு சாதாரண கால்களுக்கு இடையில் அவரது இடுப்புப்பகுதியில் ஒரு பெரிய பகுதி இருந்தது.

ஏனெனில் அங்கு இரட்டைப் பகுதி உள்ளது, சோய்டிக்கு இரண்டு மலக்குடல், இரண்டு பெண் குறிகள் இருந்ததுடன், இரண்டு மலவாய்களுக்கான சாத்தியங்களும் இருந்தன. இந்த இரட்டைப் பகுதிகள், வழக்கத்திற்கு மாறான இடத்தில் வளர்ந்து கொண்டிருந்தன.

சிறுமியின் உடலில் இருந்த மூன்றாம் காலின் எஞ்சிய பகுதியை அகற்றிய மருத்துவக் குழுவினர், சோய்டி வீட்டிற்கு திரும்பியதும், இயல்பாக இயங்குவதை உறுதி செய்யும் வகையில் மறுகட்டமைப்பு சிகிச்சைகளையும் மேற்கொண்டார்கள்.
பகுதியளவு பார்வை குறைபாடுள்ள சோய்டி கதூனால், தற்போது நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று சொல்லும் மருத்துவர் கிம்பெர், அவரின் எடையும் கூடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.