பொறுமையை சோதிக்காதீர்கள்: சீண்டினால் விளைவு விபரீதமாகும் : எச்சரிக்கும் வடகொரியா!!

391

எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். அணு ஆயுத ஏவுகணை தொடர்பாக எங்களோடு மோதினால் கடும் விளைவுகளைச் சந்திக் நேரிடும் என சீனாவிற்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வடகொரியாவின் அரச ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடகொரியாவின் பொறுமையை சோதிக்கும்படி சீனா நடந்து கொண்டால் அதற்கான கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்கும்.

எங்களுடன் வைத்திருக்கும் உறவினை சீனா பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விடுத்து எங்கள் அணு சோதனையில் தேவையற்ற தலையீடுகளை ஏற்படுத்த முனைந்தால் கடுமையான விளைவுகளும், விபரீதங்களும் ஏற்படும்.
பெய்ஜிங் தன் நாட்டின் பாதுகாப்புக்காக நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது.

எனினும் வடகொரியா அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தன்னுடைய சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இந்நிலையில் சர்வதேச நாடுகள் பலவும் வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அதனை கைவிடுமாறும் கேட்டனர்.

ஆனால், இதுவரை வடகொரியா அவர்களின் வேண்டுகோள்கள் எதனையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. குறிப்பாக, அமெரிக்கா, ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் நேரடியாகவே தங்கள் கண்டனத்தை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் வடகொரியாவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

இதனால் சீனா தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டது. இருப்பினும் இது குறித்து அந்நாட்டு அரச ஊடகம் சீனாவிற்கு எச்சரிக்கை விடும் அளவிற்கு கடுமையாக சாடியுள்ளது.

இதேவேளை, வடகொரியாவின் இந்தச் செயற்பாடுகளால் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் நிலவிவருகிறது.