வவுனியாவில் 2001ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!!

337

vavunia_high_courtமுல்­லைத்­தீவு கடலில் கடற்­ப­டை­யினர் மீதான தாக்­கு­த­லுக்கு தலை­மைத்­துவம் வழங்­கி­ய­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்­கொன்றில் சந்­தேக நபர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் இதற்­கான தீர்ப்­பினை வழங்­கினார்.

பருத்­தித்­துறை புலோ­லியைச் சேர்ந்த செல்­லப்பா இன்­ப­குமார் (37) என்­பவர் மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் குறித்த வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்­டி­ருந்­தது.

2001 செப்­டெம்பர் மாதத்­திற்கும் நவம்பர் மாதத்­திற்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் சந்­தேக நபர் செல்­லப்பா இன்­ப­குமார் முல்­லைத்­தீவு கடற்­பு­லிகள் பிரிவில் பதில் கடற்­பு­லிகள் தலை­வ­ராக செயற்­பட்ட போது கடற்­ப­டை­யினர் மீதான தாக்­கு­த­லுக்குத் தலைமை வகுத்தார் என்ற குற்­றச்­சாட்டில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

வழக்கு தொடு­ந­ரான சட்­டமா அதி­பரால் சந்­தேக நபரின் ஒப்­புதல் வாக்கு மூலம் மட்­டுமே குற்­றச்­சாட்­டுக்­கான சாட்­சி­ய­மாக முன் வைக்­கப்­பட்­டிருந்­தது.

இந்த வழக்கு விசா­ரணை வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது சந்­தே­க­நபர் செல்­லப்பா இன்­ப­குமார் ஒப்­புதல் வாக்கு மூலத்தை சுய­மாக வழங்­க­வில்­லை­யென்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதால் ஒப்­புதல் வாக்கு மூலத்தை சாட்­சி­ய­மாக ஏற்க நீதி­மன்றம் அனு­மதி வழங்­காது நிரா­க­ரித்­தது.

இந்நிலையில் குற்றச்சாட்டை நிருபிக்க வேறு சாட்சியங்களின்மையால் சந்தேக நபரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.