ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள் இரத்துச் செய்யப்படுமா?

1035

புழக்கத்திலுள்ளள 5000 ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படுமா என்பது தொடர்பில் அரசியல் மற்றும் நிதி துறை மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நாணயத்தில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் கையொப்பமிட்டுள்ளமையே இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்ட கீதா குமாரசிங்க, அரசியல் அமைப்பின் அடிப்படையில் இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் இலங்கை குடியுரிமை அல்லாத அர்ஜுன் மகேந்திரன் கையொப்பமிட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் செல்லுபடியாகுமா என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் பந்துல குணவர்தனவிடம் வினவிய போது, 5000 ரூபாய் நாணயத்தாள் செல்லுபடியாகுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் செல்ல தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
-தமிழ்வின்-