1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட பாகுபலி-2!!

419

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி-2 இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதனால், இந்த படத்தின் வசூலும் இந்திய சினிமாவில் யாரும் நிகழ்த்த முடியாத சாதனையை சாதனையை பெற்றுள்ளது.

படம் வெளியான 6 நாட்களிலேயே 800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்ற சாதனையை பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்த படம் விரைவில் 1000 கோடியை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த சாதனையையும் தற்போது பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. 9 நாட்களில் இந்த படம் 1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவிலேயே 1000 கோடியை எட்டிய முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. இனிமேல், இந்தியாவில் வெளிவரும் படங்கள்கூட இந்த சாதனையை எட்டுமா என்பது சந்தேகம்தான்.