காணமல்போன நபர் சடலமாக மீட்பு : கொலை செய்தது தாயும் மகளுமா?

606

வத்தளை கெரவலபிடிய சமகி மாவத்த பகுதியில் தந்தையின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் தாய் மற்றும் மகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரை 10 நாட்களாக காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, குறித்த முறைப்பாட்டினை விசாரணை செய்ய பொலிஸார் அவர்களின் வீட்டிற்கு சென்றவேளை அவ்வீட்டிலிருந்து சடலமாக காணமல்போன நபர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 65 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு, கொலை செய்தமைக்கான காரணம் இன்னும் கண்டயறிப்படவில்லை எனவும் அதுகுறித்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.