கனவு கண்டதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

508

தற்கொலை செய்வது போல கனவு தொடர்ந்து வந்தததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னை நகரின் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு துர்கா (16) என்னும் மகள் உள்ளார். துர்கா அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார்.

துர்காவின் கனவில் அடிக்கடி யாரோ தன்னை கொலை செய்வது போலவும், தானே தற்கொலை செய்து கொள்வது போலவும் காட்சிகள் தோன்றியுள்ளது.

இதில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இது குறித்து தனது அம்மாவிடம் கூற, அவர் துர்காவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு வரும் கனவுகள் குறித்து துர்காவுக்கு மன விரக்தி அதிகமாக திடீரென நேற்று முன் தினம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

பின்னர் வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனிளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணம் கனவின் விரக்தியா அல்லது வேறு எதாவதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.