பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஜேசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மான் சிங் (57). இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சந்திரா பாய் (35). அவரும் கணவர் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சம்பங்கிராம்நகரைச் சேர்ந்த அசோக் (37) அவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சந்திரா பணியாற்றும் நிறுவனம் கேட்டுக் கொண்டதன் பேரில் அசோக்கின் நிறுவனத்திற்கு சந்திரா அங்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். அப்போது சந்திராவுக்கும், அசோக்கிற்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி மான் சிங் வேலை காரணமாக பெங்களூரு அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார்.
மான் சிங் இல்லாததை அறிந்த அசோக் அவரின் வீட்டிற்கு சென்று சந்திராவுடன் தனிமையில் இருந்துள்ளார். திடீரென்று இரவு வீடு திரும்பிய மான் சிங் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
அப்போது தன் மனைவியான சந்திராவை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக், மான் சிங் மீது பாய்ந்து அவரை சரமாரியாக தாக்கினார்.
அப்போது மான் சிங்குடன் தான் வாழ விரும்பவில்லை எனவும் அவரை கொன்று விடுமாறு அசோக்கிடம் கூறியுள்ளார். இதனால் அசோக் அருகே இருந்த அங்கிருந்த துணியால் மான் சிங்கின் கழுத்தை நெரித்து கொன்றார்.
பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மான் சிங் மூச்சு முட்ட குடித்துவிட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் சந்திராவின் கள்ளக்காதல் விஷயம் யாருக்கு தெரியவர அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் பொலிசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். சந்திரா மற்றும் அசோக் இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






