பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையேயான 46-வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச் சாமி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் சுனில் நரைன், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து ஆடினார். அதில் அவர் அடித்த ஒரு சில ஷாட்கள் கெய்ல் போன்றே இருந்தது.
இதில் அவர்17 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதமடித்த என்ற பெருமையை பெற்றார்.
சுனில் நரைன் 15 பந்தில் இந்த அரைசதத்தை கடந்துள்ளார். இவரைத் தொடர்ந்து யூசப் பதானும் 15 பந்துகளில் அடித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா 16 பந்துகளிலும் மற்றும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 17 பந்துகளிலும் அடித்துள்ளனர்.






