இத்தாலி செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல் : குடியேறும் அனைவருக்கும் 2000 யூரோ!!

253

இத்தாலி என்பது நேரடியாக அல்லது சட்டவிரோதமாக அதிகளவானோர் செல்லும் நாடாக உள்ளது. இந்நிலையில் இத்தாலிக்கு செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலியின் Bormida என்ற கிராமத்தில் குடியேறினால் மாதாந்தம் 2000 யூரோ வழங்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் வீட்டு வாடகைக்கு மாதாந்தம் 50 யூரோவும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் கிராமத்திலுள்ள பலர் தொழில் வாய்ப்புகள் மற்றும் வேறு தேவைகளுக்காக பிரதான நகரங்களுக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் Bormida கிராமத்தை விரிவுபடுத்தி மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் நகர மேயர் சிறப்பு தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி அந்தக் கிராமத்தில் குடியேறும் ஒவ்வொருவருக்கும் 2000 யூரோ வழங்க தீர்மானித்துள்ளார்.

தற்போது Bormida கிராமத்தில் 394 பேர் மாத்திரமே வாழ்ந்து வருகின்றனர். கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள மிகவும் அழகான ஒரு இடமாக கருதப்படுகின்றது. Bormida கிராமத்திற்கு அருகில் Genoa என்ற நகரம் உள்ளது.

இலங்கையர் பலர் இத்தாலியில் தொழில் புரிந்து வருகின்றனர். அத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கான தளமாக இத்தாலி நாட்டை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.