முதியவர்கள் வாழ்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கை 36 வது இடத்தில்!!

342

Elders Day

வயோதிபர்கள் வாழ்வதற்கான நாடுகளில் சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதியவர்கள் வாழ்வதற்கான சிறந்த 91 நாடுகளில் இலங்கை 36 வது இடத்தில் உள்ளது.

ஆசிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கை 4வது இடத்தில் உள்ளது. அதேவேளை வயதானவர்கள் வாழ்தற்கு மிக சிறந்த நாடாக சுவிடன் விளங்குவதுடன் அது முதலாவது இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக நோர்வே இரண்டாம் இடத்திலும் ஜெர்மனி மூன்றாம் இடத்திலும் உள்ளன. சீனா 35 வது இடத்தில் உள்ளதுடன் இலங்கை 36 வது இடத்தில் உள்ளது. இலங்கைக்கு அடுத்ததாக ஜோர்ஜியா இடம்பிடித்துள்ளது. அந்த நாடு 37 வது இடத்தில் உள்ளது.

அதேவேளை முதியவர்கள் சிறப்பாக வாழ முடியாத நாடுகள் வரிசையில் ஆப்கானிஸ்தான் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது. அந்த நாடுகள் 91 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 89 வது இடத்திலும் தன்சானியா 90வது இடத்திலும் உள்ளன. இந்த ஆய்வுகளின் படி இந்தியா 73 வது இடத்தில் உள்ளது.

இலங்கையில் வாழும் 88 வீதமான முதியவர்கள் குடும்ப சுற்றாடலில் வாழ்வது அதிஷ்டமான நிலைமையாகும் என ஹெல்ஏஜ் இலங்கை நிறுவனத்தின் தலைவர் திலக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சொத்துக்களும் பணமும் வாழ்வதற்கு அவசியமானதல்ல என்பது இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த முன்னிலை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வறுமை நிலையில் உள்ள நாடுகளான மொரிசியஸ், போலிவியா ஆகிய நாடுகள் இந்த இந்த பட்டியலில் முன்வரிசையில் உள்ளன.