இலங்­கை­யிடம் உதவி கோரும் மியன்மார்!!

233

மியன்மார் நாட்டில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வதே எமக்­குள்ள பிர­தான சவா­லாகும். ஆகவே பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை ஒத்­து­ழைக்க வேண்டும். அத்­துடன் இலங்­கையின் கண்டி மாந­க­ரத்தை பார்ப்­ப­தற்கு நான் ஆவ­லாக உள்ளேன் என மியன்மார் நாட்டின் அரச தலைவர் ஆங் சாங் சூகி பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் தெரி­வித்­துள்ளார். இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ளு­மாறு ஆங் சாங்சூகிக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அழைப்பு விடுத்தார்.

ஒரே கரை­யோரம் – ஒரே பாதை என்னும் தொனிப்­பொ­ருளின் கீழ் சீனாவின் தலை­நகர் பீஜிங்கில் நடை­பெற்று வரும் மாநாட்டில் கலந்து கொள்ளும் முக­மாக உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு சீனா சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று மியன்மார் நாட்டின் அரச தலைவர் ஆங்சாங் சூகியை சந்­தித்து பேசினார். இதன்­போது மேற்­கண்­ட­வாறு கருத்­துகள் பரி­மா­றப்­பட்­டன.

இந்த சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், சரத் அமு­னு­கம, மலிக் சம­ர­விக்­ரம மற்றும் சாகல ரத்­நா­யக்க ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். சந்­திப்பில் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான நட்­பு­ற­வினை பலப்­ப­டுத்­து­வது தொடர்பில் இரு நாட்டு தலை­வர்­களால் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது

இதன்­போது மியன்மார் அரச தலைவர் குறிப்­பி­டு­கையில்,மியன்மார் நாட்டில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வதே எமக்­குள்ள பிர­தான சவா­லாகும். ஆகவே பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை ஒத்­து­ழைக்க வேண்டும். அத்­துடன் இலங்­கைக்கு விஜயம் செய்து கண்டி மாந­க­ரத்தை பார்ப்­ப­தற்கு ஆவ­லாக உள்ளேன் என்றார்.

இந்த சந்­தர்ப்­பத்தில் கருத்து வெளி­யிட்ட பிர­தமர் ரணில் விக்­­ர­மசிங்க, மியன்மார் நாட்டின் ஜன­நா­ய­கத்தை உறுதி செய்­வ­தற்கு பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­வ­தற்கு நாம் தயார். அத்­துடன் இதற்­கான இலங்­கையின் பாரா­ளு­மன்ற பிரதிநிதிகள் குழுவினை விரைவில் மியன்மாருக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் உறு தியளித்தார். மேலும் ஆங்சாங் சூகியை இலங்கைக்கு வருகை தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.