சிறையை உடைத்து தப்பிய 17 குற்றவாளிகள் சுட்டுக்கொலை!!

800

பப்புவா நியூகினியாவில் புய்மோ சிறையை உடைத்து, தப்பித்து சென்ற குற்றவாளிகளை தேடும் நடவடிக்கையின் போது, சுமார் 17 கைதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 57 பேரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புய்மோ சிறைசாலை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

பப்புவா நியூ கினியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லே நகரிலுள்ள புய்மோ சிறையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்து வெள்ளிக்கிழமை கைதிகள் குழுவொன்று சிறையின் சுற்றுச்சுவரை உடைத்து தப்பிசென்றுள்ளனர். இச்சூழலில் பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார் தப்பியோடிய கைதிகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 17 கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் சிறைக்கு அண்மையில் பதுங்கியுள்ளதாக நம்பப்படும் 57 கைதிகளை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த வருடம் குறித்த சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய 12 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.