ஜெயலலிதாவைக் கொன்ற மாதிரி நாங்கள் கொல்ல மாட்டோம் : சசிகலாவை அதிரவைத்த சிறை அதிகாரி!!

637

என்னை பெங்களூரு சிறையிலிருந்து கூடிய விரைவில் தமிழக சிறைக்கு மாற்றுங்கள் என்கிற கதறல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.

சசிகலாவை சந்திக்க வருபவர்கள் யார் அவருக்கு வீட்டு உணவு வழங்கப்படுகிறதா அவருக்கு என்ன மருந்துகள் வழங்கப்படுகின்றன அவர் இரவு நேரத்தில் சிறையை விட்டு வெளியே செல்கிறாரா இவையெல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூருவில் உள்ள சமூகஆர்வலர்கள் கேட்கும் கேள்விகள்.

ஆரம்பத்தில் சிறை உடைகளை அணிந்து கொண்டு காலையில் வாக்கிங் செல்வதும், மதிய வேளையில் இளவரசியுடன் சேர்ந்து சிறை வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பேசுவதும் சசிகலாவின் வழக்கமாக இருந்தது.

தன் அண்ணன் மகன் மகாதேவன் மரணச் செய்தி கேட்டு குலுங்கிக் குலுங்கி அழுத சசி, தினகரன் கைது செய்தி வந்த பிறகு பேசாமடந்தையாகிப் போனார்.

இந்நிலையில் இளவரசிக்கு சுவாசக்கோளாறும் இதயக்கோளாறும் தாக்க அவரை வெளியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என சிறை அதிகாரிகளைக் கேட்டார்.

பெண்கள் சிறையின் ஜெயில் வார்டனான ராணி, அதெல்லாம் முடியாது என சசியின் முகத்திற்கு நேராக சொன்ன போது என்னங்க இது அநியாயம் என கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் சசிகலா.

இது உலகத் தரம் வாய்ந்த சிறை. இங்குள்ள மருத்துவமனையில் மிகச்சிறந்த தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது.

ஜெயலலிதாவை கொன்றது மாதிரி நாங்க யாரையும் சாகடிக்க மாட்டோம் (ஜெயலலிதான்னா சாயிஸ்தங்கே வேறே யார்னுனு சாயிஸ்சல்லா) என கன்னடத்தில் ராணி கத்தியதை தமிழில் கேட்டுத் தெரிந்துகொண்ட சசிகலா நொறுங்கிப் போனார்.

அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளவரசியைப் பார்ப்பதும், அவரது உடல்நிலை பற்றி சென்னையில் இருந்து இதற்காகவே வரவழைக்கப்படும் சிறப்பு டாக்டரிடம் விவாதிப்பதும்தான் சசிகலாவின் வேலையாக இருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை இளவரசி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது தான் நிம்மதி அடைந்தார் சசிகலா.

இளவரசிக்கு உடல்நிலை சரியில்லாத போது ஒரேமுறை தான் சிறைத்துறை நிர்வாகம் அவரது மகன் விவேக்கை சந்திக்க அனுமதித்தது.

மற்ற நேரமெல்லாம் சசிகலாவை வக்கீல் நாமக்கல் செந்தில் மட்டுமே சந்தித்தார். அவர் மூலம்தான் கட்சி, ஆட்சி, மத்திய அரசு பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்டார்.

உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனைப் பற்றிய கவலையும் சசியை வாட்டுகிறது.

நாங்க மட்டும்தான் பாவம் செய்தோமா? எதற்காக இந்தக் கஷ்டம்?” என கொக்கரித்துப் பேசும் சசிகலாவின் துயரத்தைக் கேட்ட அவரது உறவினர்கள் சசிகலாவை, ஜெ.வைப் போல நடத்த வேண்டும்.

பரப்பன அக்ரஹாராவில் இருந்த ஜெ.வை அப்போது ஜெயில் சூப்பிரெண்ட்டாக இருந்தவர் ஏ.சி. அறையில் தங்கவைத்தார். அவருக்குத் தேவையான செல்போன் வசதிகள் செய்து கொடுத்தார்.

அதுபோல சசிக்கும் செய்துதர வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என பரப்பன அக்ரஹாரா சிறையின் சூப்பிரெண்ட்டான கிருஷ்ணகுமாரிடமும், டி.ஐ.ஜி.யான சத்யநாராயணாவிடமும் பேசிப் பார்த்துவிட்டார்கள்… எதுவும் நடக்கவில்லை.

சிறை சூப்பிரெண்ட் கிருஷ்ணகுமார் வழக்கத்தை விட அதிகமான கண்காணிப்பை செலுத்தும் வகையில், சசிகலாவை கண்காணிப்பு நிறைந்த அறைக்கு மாற்றிவிட்டார்.

அவ்வப்போது சிறை ஊழியர்கள் மூலம் கிடைத்துவந்த வீட்டுச் சாப்பாடும் அடிக்கடி கிடைப்பதில்லை என்பதோடு, சசிகலா இருக்கும் சிறை பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை அதிகப்படுத்தி விட்டார்.

இது சசிகலாவை இன்னமும் நொந்துபோக வைத்துள்ளது என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்களைச் சேர்ந்தவர்கள்.சசிகலா, இளவரசி மட்டுமல்ல சுதாகரனையும் சிறைவாசம் கடுமையாகப் பாதித்துள்ளது.

150 கைதிகளுடன் சத்திரம் போன்ற கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி முருகனைப் போல் ஜடாமுடி வளர்த்து, சாமியார் போல வாழ்கிறார்.

ஆன்மிகம், பஜனை என சாமியார் போல வாழும் சுதாகரனைப் பார்க்க யாரும் வருவதில்லை. எப்போதாவது வருபவர்களிடம் எடப்பாடி பற்றி பேசும் சுதாகரன், எடப்பாடி நான் சொன்னால் எதையும் செய்யமாட்டேன்கிறார் என சின்னப்பிள்ளை புலம்புவது போல புலம்புகிறாராம்.

மறுசீராய்வு மனுவை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார் சசிகலா. இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியான கேஹார், ஜெ.வுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் வழங்கிய தீர்ப்பை அவரது பிரிவு உபசார விழாவில் பாராட்டிப் பேசினார் என்பதைக் கேட்டதும் நொந்து போனார்.

விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்’ என சிறைக்கு மெஸேஜ் அனுப்பியுள்ளார் திவாகரன். என்னை எப்படியாவது தமிழகத்திலுள்ள சிறைக்கு மாற்றுங்கள். என்னால் இங்கிருக்க முடியாது என திவாகரனின் மெஸேஜ் கொண்டுவந்த ஆளிடம் சொல்லி அனுப்பியுள்ளார் சசிகலா.

-நக்கீரன்-