வவுனியாவில் யாழ் சுகாதார திணைக்களத்தில் வான் விபத்து!!

929

 
வவுனியா வசந்தி திரையரங்குக்கு முன்பாக நேற்று (18​.05.2017​) இரவு யாழ் சுகாதாரத்திணைக்களத்திற்குச் சொந்தமான வான் விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ் விபத்த பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா வசந்தி திரையரங்குக்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எனினும் நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்திற்குள்ளான வான் இன்று (19)காலை 9மணிவரை அவ்விடத்தில் தரித்து நின்றுள்ளது. இன்று காலையே வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.

வீதியின் நடுவே அமைக்கப்பட்ட விளம்பரப் பலகையுடன் மோதுண்டு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.