காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும்!!

381

சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வீழ்ச்சி அதி­க­ரிக்­கும்­போது காற்றின் வேகம் மேலும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும் எனவும் அத்­தி­ணைக்­களம் எதிர்­வு­ கூ­றி­யுள்­ளது.

இதன்­பி­ர­காரம் மேல், மத்­திய, வட­மத்­திய, வடமேல், சப்­ர­க­முவ, தென் மாகா­ணங்­களில் அதி­க­ளவில் மழை வீழ்ச்சி பதி­வாகும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்பில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் அறிவிப்பில் மேலும் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வதுஇ நாடு­பூ­ரா­கவும் நேற்­றைய தினம் பல பகு­தி­க­ளில் இடி மின்­ன­லுடன் கூடிய கால­நிலை நில­வி­யது. குறிப்­பாக பலத்த காற்­றுடன் பல பகு­தி­க­ளில் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­ய­மை­யினால் மக்கள் பெரும் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டனர். காற்­றி­னாலும் பல வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன.

எனினும் கொழும்பில் மட்­டக்­குளி போன்ற சில பகு­தி­களில் காலை வேளை அதி­க­ளவில் மழை வீழ்ச்சி பதி­வா­னாலும் ஏனைய பகு­தி­களில் சிறிய தூறல் மழை பெய்­தமையை அவ­தா­னிக்க முடிந்­தது.

மேலும் சில பகு­தி­களில் இடைக்­கி­டையே மழை குறுக்­கிட்­டது. மேல், சப்­ர­க­முவ, வடமேல், தென், மத்­திய மாகா­ணங்­களில் மழை பெய்­துள்­ளது. அத்­துடன் இன்­றைய தினமும் 50 மில்­லி­மீற்­ற­ருக்கு அதி­க­மான மழை­வீழ்ச்சி குறித்த பகு­தி­களில் பதி­வாகும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மேலும் அதி­க­ள­வி­லான காற்றும் இடி மின்னல் தாக்­கமும் காணப்படும். அதேபோன்று கிழக்கு, ஊவா மாகாணங்களில் இன்று 2 மணிக்கு பின்னர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.