துபாயில் £1.3 பில்லியன் செலவில் இரண்டு புதிய தீவுகளை உருவாக்கத் திட்டம்!!

586

மனிதர்களால் உருவாக்கப்படும் இரண்டு புதிய தீவுகளை £1.3 பில்லியன் செலவில் கட்டமைக்க துபாய் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தீவுகளில் கடல் பூங்காக்களும் ஆடம்பர மாளிகைகளும் அமைக்கப்படவுள்ளன. மார்ஸா அல் அரப் மற்றும் புர்ஜ் அல் அரப் என அத்தீவுகளுக்கு பெயரிடப்படவுள்ளன.

4 மில்லியன் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் மார்ஸா அல் அரப் தீவு சுற்றுலாவிற்காக பிரத்தியேகமாக கட்டமைக்கப்படுகிறது.

புர்ஜ் அல் அரப் தீவில் ஆடம்பர மாளிகைகள் உருவாக்கப்படவுள்ளன. இங்கு 140 மாளிகைகளும் 1700 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுடைய பெரிய திரையரங்கும் கட்டமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.