வெலிகம, கப்புவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும். 89 வயதான நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையின் நில்வலா நுழைவாயிலில் அநாதரவாக விட்டுச் செல்லப்பட்டார்.
கடந்த 19 ஆம் திகதி மாலை கடும் மழை பெய்த போது இந்த வயோதிபத் தாய் சுமார் 200 மீட்டர் தூரம் கொடகம பண்டாராம மாவத்தை வரை நடந்து வந்துள்ளார்.
அப்போது பிரதேசவாசிகள் பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு தொடர்பு கொண்டு தெரிவித்ததை அடுத்து மாத்தறை பொலிஸார் அந்த இடத்துக்கு வந்து இந்த வயோதிபத் தாயை பொறுப்பேற்று மாத்தறை வைத்தியசாலையில் சேர்ந்துள்ளனர்.
தமக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் கடந்த 19 ஆம் திகதி தனது மகளும் மருமகனும் தன்னை வாகன மொன்றில் ஏற்றி நெடுஞ்சாலையில் அநாதரவாக விட்டுச் சென்றதாகவும் அத்தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.






