நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017.
ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நிகழும் ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 11ஆம் நாள் (25.06.2017) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
- 01.07.2017 திருக்கயிலைக் காட்சியும்,
- 04.07.2017 திருமஞ்ச திருவிழாவும்,
- 07.07.2017 (வெள்ளிக்கிழமை) இரவு சப்பறத் திருவிழாவும்
- 08.07.2017 (சனிக்கிழமை) அகிலாண்டேஸ்வரிக்கு தேர் உற்சவமும்
- 09.07.2017 ஞாயிற்றுக் கிழமை. புனித கங்காதரணி தீர்த்தக்கரையில் தீர்த்தோற்சவம்.
- 10.07.2017 இரவு தெப்போற்சவத்துடன் நிறைவுபெறும்.
இலங்கையின் கடல் சூழ்ந்த தீவாகிய நயினாதீவில் அழகொழுக வீற்றிருந்து அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் உயர்திருவிழாவிலே அன்னையடிவர்கள் வருகைதந்து அன்னையவள் திருவருட்கடாட்சத்தினை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்..
தாயேயாகி வளர்த்தனை போற்றி.