வெள்ளத்தில் மூழ்கி ஆபத்தில் சிக்கியுள்ள 15 சிறுவர்கள் உட்பட 30 பேர்!!

828

காலியில் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ள நபர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஹினிதுக, நுககஹ பிரதேசதிலுள்ள வீடொன்று வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வீட்டை நெருங்க முடியாத அளவு வெள்ளம் நிரம்பியள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் சிக்கியுள்ள நபர் ஒருவர் ஊடகமொன்றுக்கு தொலைப்பேசி ஊடாக தகவல் தெரிவித்துள்ளார்.

15 சிறு பிள்ளைகளுடன் நேற்று மாலை முதல் இவ்வாறு தாம் ஆபத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 30 பேர் இவ்வாறு வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.