வவுனியா மதினா நகரில் விஷமிகள் அட்டகாசம் : இரு கடைகள் சேதம்!!

716

 
வவுனியா மதினா நகர் பகுதியில் அமைந்துள்ள இரு முஸ்ஸிம் கடைகள் நேற்று (30.05.2017) இரவு இனந்தேரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள முஸ்ஸிம் உணவத்தின் முன்பக்கம் தீயுட்டப்பட்டதுடன் அருகே இருந்த தொலைத்தொடர்ப்பு நிலையத்தின் விளம்பரபலகை, மின்குமிழ் என்பவற்றை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கிவிட்டு தப்பித்சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாறம்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.