வவுனியா மக்களுக்கு நகரசபையின் ஓர் அறிவித்தல்!!

1146

 
இலங்கை சனநாயக சோசலிக குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய வவுனியா நபரசபையின் அதிகாரப் பிரதேசத்திக்குள் கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி சேகரிக்கும் பணிகள் 01.06.2017ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இவற்றின் முதற்கட்டமாக மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் செயற்த்திட்டம் வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் இன்று (31.05.2017) மதியம் 2 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டதுடன் வவுனியா நகரமத்தியில் விழிப்புணர்வு பதாதைகளும் கட்டப்பட்டுள்ளன.

இச் செயற்றிட்டத்தில் வவுனியா வர்த்தக சங்க தலைவர் ரி.கே.இராஜலிங்கம் , பொது சுகாதாரப் பரிசோதகர், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா நகரசபையின் செயலாளர், ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய இச் செயற்றிட்டத்தினை நாங்கள் வவுனியா நகரில் செயற்படுத்தி வருகின்றோம்.

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பச்சை நிற கழிவுத்தொட்டியில் உணவுப்பொருட்கள், இலை குழைகள், சமைலறைக்கழிவுகள், மக்கக்கூடிய பொருட்கள் (துணி வகைகள், ஆடைகள் தவிர்த்து ) மற்றும் செம் மஞ்சல் நிற கழிவுத் தொட்டியில் பொலித்தீன், பிளாஸ்டிக், துணிகள் மற்றும் நீல நிற கழிவுத்தொட்டியில் கடதாசி , காட்போட் அட்டைகள் மற்றும் சிவப்பு நிற கழிவுத் தொட்டியில் கண்ணாடிப்பொருட்கள், உலோகப் பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள், மாபில் பொருட்களை பிரித்துப் போடவும்.

வருகின்ற வெள்ளிக்கிழமைக்கு முதல் வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் நான்கு நிறங்களிலான குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.