சம்பூர் கடற்பரப்பில் கூட்டங்கூட்டமாகக் கரையொதுங்கிய திமிங்கிலங்கள்!!

652

 
சம்பூர் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கூட்டங்கூட்டமாக இன்று காலை கரையொதுங்கியுள்ளன.

சுமார் 10 தொடக்கம் 11 அடி நீளமான 40 திமிங்கிலங்கள் கரையொதுங்கின. நேற்று மாலை கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் விட்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக இந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கி இருக்கலாம் என சம்பூர் கடற்றொழில் பரிசோதகர் மொகமட் ரிஸ்வி தெரிவித்தார்.