வவுனியா வர்த்தக சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!!

522

 
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக வவுனியா வர்த்தகர் சங்கம் கடந்த இரண்டு தினங்களாக வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி உதவிப் பொருட்களை நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் வர்த்தக சங்கத் தலைவர், பொருளாலர், செயலாளர் மற்றும் மத்திய உறுப்பினர்கள் கலந்து கொண்டு வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டது.

இன்று வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து விஷேட குழுவினர் வவுனியா மாவட்ட செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.