புத்தங்களுக்காக நூலகங்கள் உள்ளதைப் போல் மரங்களுக்காகவும் நூலகங்கள் உள்ளன. மரங்களுக்காக மரங்களால் செய்யப்பட்ட நூலகத்தை xylotheques என்று அழைக்கிறார்கள்.
Xylos என்றால் மரம் வாநஙரந என்றால் களஞ்சியம். புத்தக வடிவில் மரத்தாலான பெட்டிகளைச் செய் கிறார்கள். இந்தப் பெட்டிக்குள் மரங்களிலிருந்து பெறப்பட்ட இலை, பூ, காய், கனி, விதை, மரப்பட்டை, வேர் போன்ற மாதிரிகளைச் சேகரித்து வைக்கிறார்கள்.
தாவரவியல் பெயர்கள், மரம் பற்றிய குறிப்புகள், ஏதாவது நோய் தாக்கியிருக்கிறதா போன்ற தகவல்களையும் எழுதி வைத்துவிடுகிறார்கள்.
வழக்கமான நூலகத்தைப் போலவே மர அலமாரிகளில் இந்த மரப்புத்தகங்களும் அழகாக அடுக்கி, தலைப்புகள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
அமேரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்திலுள்ள சாமுவேல் ஜேம்ஸ் மரநூலகத்தில் 60 ஆயிரம் மரங்கள் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பெல்ஜியத்தில் 57 ஆயிரம் மாதிரிகளுடனும் ஜேர்மனியில் 37 ஆயிரம் மாதிரிகளுடனும் மர நூலகங்கள் இயங்கிவருகின்றன.