தமிழகத்தில் ஆடிட்டர் உட்பட அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தீயில் எரிந்து சாம்பலான வழக்கில் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் கணக்காய்வாளர் ஜெயதேவன்(55). இவருக்கு ரமாதேவி என்ற மனைவியும், திவ்யஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் கடந்த 27-ஆம் திகதி காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே உள்ள இடத்தில் திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்ததுள்ளது.
இதில் ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகிய 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இதனால் இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பொலிசாருக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
திவ்யஸ்ரீக்கும், பதன்கோட்டில் இராணுவத்தில் தலைவர் பணியில் இருக்கும் சரத் என்பருக்கும் அண்மையில் திருமணம் நடந்துள்ளது.
அதன் பின்னர் இருவருக்கும் சண்டை சச்சரவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் பல்வேறு அவமானங்களை சந்தித்த திவ்யஸ்ரீ, அங்குள்ள மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட பொலிசார் திவ்யஸ்ரீயின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசும்படி அறிவுறுத்தி இருந்தனர். இதனால் ஜெயதேவன் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தருணத்தில் சுற்றுலா சென்ற அவர்களின் கார் தீப்பிடித்து எரிந்துள்ளதால், அவர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.
தற்போது இது கொலையாக இருக்கலாமா என்ற புதிய சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக திவ்யஸ்ரீ கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் சில தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் தீயில் கருகியபோது மூன்று பேருமே எந்த சத்தமும் கொடுக்கவில்லை. வெளியில் வரவும் முயற்சிக்கவில்லை.
என்னதான் தற்கொலை முடிவாக இருந்தாலும் தீ உடலில் பரவும்போது அலறுவார்கள். அந்த சாதாரண அலறல் கூட இவர்களிடமிருந்து வரவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கார் ஆடவில்லை, அசையவில்லை, ஒரு சத்தமும் கேட்கவில்லை.
இந்த சம்பவத்தால் இவர்கள் மூன்று பேரையும் கொன்று விட்டு யாரேனும் எரித்திருக்கலாம் என்று சந்தேக எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து பொலிசார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.






