வவுனியாவில் சிறைச்சாலை கைதி மரணம்!!

656

வவுனியா சிறைச்சாலையில் இருந்த சிறைக்கைதி ஒருவர் நேற்று(03.06.2017) காலை உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை வவுனியா சிறை சாலையில் இருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீன காரணமாக வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 32) என்பவரே மரணமடைந்தவராவார்.

இவர் கடந்த புதன்கிழமை வவுனியா சிறைசாலையில் அடைக்கப்படடவர் என்பது குறிப்பிடத்தக்கது.