பல வருடங்களாக கழிப்பறையில் வாழும் குடும்பத்தின் பரிதாப நிலை!!

506

 
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கழிப்பறையில் வாழ்க்கை நடத்தும் குடும்பம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பொலன்னறுவை, பராக்கிரமபாகு சமுத்திரம், பத்தினி கோவிலுக்கு அருகில் உள்ள கழிப்பறையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகின்றது.

குறித்த குடும்பம்,அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பறையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் கிடைக்கும் பணத்தில் அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

கழிப்பறையில் வாழ்க்கை நடத்துவதனால் சமூகத்தில் தாழ்த்தப்பட்டுள்ள அவர்களுக்கு கூலி வேலை செய்வதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

வீடமைப்பு திட்டத்தின் ஊடாக இந்த குடும்பத்திற்கு வீடு ஒன்றை கட்டித்தருவதாக வாக்குறுதியளித்த போதிலும் இதுவரை கட்டிகொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.